நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதுப்பட்டி பகுதியில் கோபிநாத்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி தீவன மூலப்பொருட்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு கோபிநாத் சின்ன முதலைப்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி அந்த பணத்தை வட்டியுடன் மாதம்தோறும் செலுத்திவிட்டார். இந்நிலையில் பணத்தை முழுமையாக செலுத்தி விட்டதால் தான் கொடுத்த சொத்து பத்திரங்களை திரும்ப தருமாறு கோபிநாத் கேட்டுள்ளார்.
அப்போது அந்த நபர் மோசடி செய்து கோபிநாத்திற்கு சொந்தமான இடத்தை அவரது பெயரில் கிரையம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கோபிநாத் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.