Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

3 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடுகள்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!

ஆடு திருட்டில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான பூமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் பூமிநாதனை  வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனின் உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் ஆடு திருடும் கும்பலை தீவிரமாக தேடி வந்துள்ளனர். தற்போது பூமிநாதனை கொலை செய்த 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 லட்சம் மதிப்பிலான ஆடுகளையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |