உலகம் முழுவதுமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருமே கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் 2 டேஸ் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தி வரும் நிலையில், மூன்றாவது டோஸ் செலுத்தப்படும் என்று முதல் நாடாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியும் டெல்டா வகை கொரோனா வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.