மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழையாறு துறைமுகத்தில் 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பங்கு மூலம் விற்பனை செய்யப்படும் டீசல் விலையை விட மீன்பிடி துறையின் மூலம் விற்பனை செய்யப்படும் மானிய டீசலின் விலை அதிகமாக உள்ளது.
இதனை கண்டித்து டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.