சென்னையிலுள்ள மண்ணடியில் செல்வக்கனி- யாஸ்மின் தம்பதியினர் வசித்து வருகின்றனர். செல்வக்கனி என்பவர் பர்மா பஜாரில் கடை வைத்திருக்கிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களின் மூன்றாவது குழந்தையான ஆசியா பிறந்து 18 மாதம் ஆகும் நிலையில், நேற்று இரவு மூன்றாவது மாடியில் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை பால்கனியில் உள்ள கம்பியில் ஏறி நின்று விளையாட முயற்சித்தபோது மூன்றாவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தது.
அதனால் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் குழந்தையை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆசியா கீழே தவறி விழுந்த இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் குழந்தைகள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுவருகிறது . மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.