திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள வாக்கு என்னும் மையமான ஸ்ரீராம் வித்யாலயா பள்ளியை வேட்பாளர்கள் அனைவரும் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பாண்டியராஜன், ரொம்ப அருமையாக உயர் பாதுகாப்போடு இந்த இடம் கண்காணிக்கப்படுகின்றது. மூன்று லட்சத்திற்கு மேல் முதன் முறையாக ஆவடி தொகுதியில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
இன்னும் போஸ்ட் ஓட்டுகள் வந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலே அதிகமாக போஸ்ட் ஓட்டுகள் இருப்பது ஆவடி தான். கிட்டத்தட்ட 5000 போஸ்ட் ஓட்டுகள் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 லட்சம் வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடிய தொகுதிகள் எட்டு இருக்கிறது. இந்த எட்டில் அதிக வாக்கு பதிவானது ஆவடியில் தான். 68 விழுக்காடு பதிவாகியுள்ளது.
இதுவரைக்கும் சென்ற முறை பாராளுமன்றத்தில் 64 சதவீதம், சென்ற முறை சட்டமன்றத்தில் 67 சதவீதம். இந்தமுறை 68 விழுக்காட்டுக்கு மேல் பதிவாகியிருப்பது மக்களுடைய எழுச்சியை காட்டுகிறது என்று நான் நம்புகிறேன். நிறைந்த மனதுடன் இரண்டாம் தேதி மே அன்று அதிமுக உடைய பெரும் வெற்றியை எதிர்பார்த்து தோழர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.