Categories
மாநில செய்திகள்

3-வது முறையாக மாடு பிடிபட்டால்…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை…!!!!

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல நேரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சூழலும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டும், பொது இடங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் நோக்கதுடனும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் பொது சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் சாலையில் விடப்படும் மாடுகள் மூன்றாவது முறையாக பிடிபட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படாது. புலு கிராஸிடம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |