தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிகாடு பகுதியில் விவசாயியான சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சந்திரசேகர் கிணற்றுக்குள் இருந்த மின்மோட்டாரை கட்டியிருந்த கயிற்றை சரி செய்வதற்காக தண்ணீருக்குள் இறங்கியுள்ளார். இவர் தண்ணீருக்குள் மூழ்கி கயிறை சரிசெய்து 2 முறை மேலே வந்து விட்டார். ஆனால் 3-வது முறையாக கயிற்றை சரி செய்ய முயன்ற போது சந்திரசேகர் தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சந்திரசேகரை சடலமாக மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் சந்திரசேகரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.