மராட்டிய மாநிலத்தில் 64 வயது முதியவர் உயிரிழந்ததால், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது.இதை தொடர்ந்து 3 வயது சிறுமியும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்..
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. ஏற்கனவே கல்லூயில் 76 வயது முதியவரும், டெல்லியில் 68 வயது மூதாட்டியும் மரணமடைந்தனர்.
இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் எண்ணிக்கைகளில் மராட்டிய மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இங்கு இதுவரை 39 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார். கல்யாண் என்ற இடத்தில் 3 வயது சிறுமிக்கும், அவரது தாய்க்கும் கொரோனா உறுதியானது. மராட்டியத்தில் தொடர்ந்து வைரஸ் பரவி வருவதால், பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோவில் மூடப்பட்டு உள்ளது.
ஸ்ரீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹல்வாய் கோவில் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் சுவர்கள் அடையாளம் குறியீடுகள் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.