Categories
மாநில செய்திகள்

3 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை

3 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சையை செய்ததன் மூலம் சுகாதார துறையில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

 

ஆசியாவில் முதல் முறையாக ரஷ்யாவைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காணொளியில் பேசிய முதலமைச்சர் உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் மருத்துவ வசதிகள் உள்ளதாகவும் சுகாதாரத் துறையில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிப்பதால் வெளிநாட்டினரும், வெளிமாநிலத்தவரும் அதிகளவில் வருவதாகவும் இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குவதாகவும் முதல் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.இந்த நிகழ்வின் போது சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

Categories

Tech |