Categories
உலக செய்திகள்

3 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் “ப்ளூ டிக்” வசதி…. டுவிட்டர் நிறுவனம் முடிவு….!!

3 வருடங்களுக்கு பிறகு ப்ளூ டிக் வசதியை குறிப்பிட்ட 6 கணக்குகளுக்கு மட்டும் மீண்டும் கொண்டு வர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் “ப்ளூ டிக்” எனப்படும் “சரிபார்க்கப்பட்ட கணக்கு” ஒரு கவுரவ விசயமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது. டுவிட்டரை எல்லோரும் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த “ப்ளூ டிக்” வசதி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் போன்றோருக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. எனவே இந்த விஷயத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து பிரபலங்கள் என்பதற்கு என்ன அளவுகோல்? எதை அடிப்படையாக வைத்து “ப்ளூ டிக்” வசதி அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது? என்று இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்துள்ளன. இதனால் கடந்த 2017ம் வருடம் டுவிட்டர் நிறுவனம் “ப்ளூ டிக்” வசதியை முழுவதுமாக நிறுத்தியுள்ளது. இந்நிலையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த “ப்ளூ டிக்” வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த வசதி அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் கொண்டு வரப்படும் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து புதிய கொள்கை ஒன்றினை வெளியிட்டுள்ள டுவிட்டர் நிறுவனம், அரசு துறைகள், நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள், செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு துறைகள் மற்றும் பிற செல்வாக்கு மிக்க நபர்களின் கணக்குகள் மட்டுமே “ப்ளூ டிக்” வசதியே பெறுவதற்கு தகுதியடையவை என்று தெரிவித்துள்ளது. தங்களின் இந்த புதிய வசதி குறித்து டுவிட்டர் பயனாளர்கள் அடுத்த மாதம் 8ம்  தேதி வரை தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

Categories

Tech |