ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 1.35 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தேர்தலுக்கு முன்பே செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. 12000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு புதன்கிழமை முதல் ஏலம் நடந்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய 3 தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த திட்டத்திர்கான ஏலத்தில் கலந்து கொண்டுள்ளன பண்டிகை காலம் தொடங்குபதற்கு முன்பே முதல் தவணை ஸ்மார்ட் ஃபோன்களை நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிரஞ்சீவி உடல்நலக் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மூன்று வருடங்களுக்கு இணைய இணைப்போடு கூடிய ஸ்மார்ட் ஃபோன்கள் வழங்கப்பட உள்ளது.