தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் உள்ள தெற்கு தெருவில் முத்துகுமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் தேனியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகுமார் தேனியில் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்துகுமார் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகியதால் அவர் கர்பமடைந்துள்ளார்.
இதனைதொடர்ந்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்துகுமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறி முத்துகுமாரும் அவரது தந்தை பாஸ்கரனும் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் உடனடியாக தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.