Categories
உலக செய்திகள்

3 வருட இடைவெளியில்…. ஒரே நாளில் 3 குழந்தைகள்…. அமெரிக்காவில் நடந்த ஆச்சர்யம்….!!

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு 3 வருட இடைவெளியில் ஒரே தேதியில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கிளாமர் என்ற பெண் 2015,2018,2021 ஆகிய 3 ஆண்டுகளிலும் ஒரே தேதியில் அதாவது ஆகஸ்ட் 25 ஆம் தேதி 3 குழந்தைகளை அவர் பிரசவித்துள்ளார். 3 ஆண்டுகள் இடைவெளியில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே முடிவு செய்ததாகவும் ஆனால் ஒரே தேதியில் 3 குழந்தைகளும் பிறந்திருப்பது தங்களுக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும், கிறிஸ்டியன் கூறியுள்ளார். அவர்களது குடும்ப நாயான 16 வயதாகும் கோடா பியரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் பிறந்தது என்பது மற்றுமொரு வியப்பூட்டும் கூடுதல் தகவலாக உள்ளது.

Categories

Tech |