திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவில் அஜய்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் நெருங்கி பழகி இருக்கிறார்கள். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றிய இளைஞர் எல்லை மீறி நடந்திருக்கிறார். இதனால் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த சம்பவம் பெற்றோருக்கும் தெரிந்து விடும் என்ற பயத்தில், சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுவரை யாருக்கும் தெரியாத சிறுமியின் கர்ப்பமாக இருப்பது தெரியாது. அதனைத் தொடர்ந்து காதலி பூச்சி மருந்தை குடித்ததை அறிந்த அஜயும் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி உள்ளார். அதன்பிறகு அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காதலர்கள்இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஜய் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அஜய் மீது போக்ஷா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.