Categories
தேசிய செய்திகள்

3 வருட திருமண வாழ்க்கை… “காதலியை கல்யாணம் பண்ணிக்கோங்க” மனைவி எடுத்த முடிவு…!!

திருமணம் முடிந்த மூன்று வருடம் கழித்து தனது கணவனின் காதலை சேர்த்து வைக்க மனைவி விவாகரத்து வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் போபாலை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். காரணம் அவரது கணவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அவரது காதலை சேர்த்து வைக்க நினைத்து விவாகரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், “அந்த பெண் மூன்று வருடமாக தனது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ளார். அவரது கணவர் தனது மனைவியுடனும் தான் காதலித்த பெண்ணுடன் ஒரே நேரத்தில் சேர்ந்து வாழ நினைத்துள்ளார்.

ஆனால் சட்டப்படி அதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் தான் நன்றாக யோசித்த அவரது மனைவி தனது கணவருக்கு விவாகரத்து வழங்கி அவரது காதலியை திருமணம் செய்வதற்கு உதவி செய்துள்ளார்” எனக் கூறினார்.

Categories

Tech |