சட்டமன்றத் தேர்தலில் 3 விதமான வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையமானது தபால் வாக்கு முறையை ஏற்படுத்தி உள்ளது .
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தபால் வாக்கு முறையை பற்றி தெரிவித்துள்ளார் . இந்திய தேர்தல் ஆணையமானது வாக்குச்சாவடிகளில் வந்து வாக்களிக்க முடியாத மூன்று விதமான வாக்காளர்களுக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோன நோய்த்தொற்று உடையவர்கள் மற்றும் தொற்றினால் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் என 3 பிரிவினருக்கான தபால் வாக்கு மூலம் வாக்களிக்க வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரிவினரில் உள்ள வாக்காளர்கள் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர் அலுவலரிடம் 12டி படிவத்தை பெற்றுக்கொண்டு வாக்காளரின் பெயர் இடம்பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற 16ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு அலுவலரிடம் விண்ணப்பம் செய்யலாம்.