Categories
மாநில செய்திகள்

3 விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

சென்னை எழும்பூர் -விழுப்புரம் மார்க்கத்தில் மதுராந்தகம் யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளது. அதனால் வைகை, பல்லவன் உள்ளிட்ட மூன்று விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. மதுரை -சென்னை எழும்பூருக்கு செப்டம்பர் 22, 29 ஆகிய தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் (02636) விழுப்புரம்-சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் -காரைக்குடிக்கு செப்டம்பர் 22மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3. 45 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும். புதுச்சேரி-புது தில்லிக்கு செப்டம்பர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் விழுப்புரம், காட்பாடி, பெரம்பூர் மற்றும் கூடூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூர் நிலையத்தில் நிறுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |