Categories
மாநில செய்திகள்

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்நிலையில் இதில் பேசிய, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உழவர்களின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |