Categories
தேசிய செய்திகள்

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்… விவசாயிகளிடம் மன்னிப்பு கோருகிறேன் – பிரதமர் மோடி..!!

எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை, விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..

பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது, நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.

மேலும் 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை.. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும்.. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப்பெற வேண்டும்.. வேளாண் சட்டங்களைத் முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.. அடுத்தாண்டு பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Categories

Tech |