மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெறப்பட்டதை விவசாயிகள் வெற்றி தினமாகக் கொண்டாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே விவசாயிகளின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.