Categories
தேசிய செய்திகள்

3 வேளாண் சட்டம் ரத்து…. எதற்காக தெரியுமா…? பிரதமர் விளக்கம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் மாஹோபாவில் விவசாயிகளுக்கு ரூ.3,250 கோடி மதிப்பிலான நலதிட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் ரத்து செய்தது தொடர்பாக விளக்கம் அளித்தார். குடும்ப அரசியல் கட்சிகள் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை விரும்பவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், மற்ற அரசியல் கட்சிகள் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்கின்றன. மேலும் முந்தைய ஆட்சிகளில் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. தமது ஆட்சியில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த பட்டிருக்கிறது என்று கூறினார்.

Categories

Tech |