Categories
தேசிய செய்திகள்

3 வேளாண் சட்டம் வாபஸ்…”இதற்காக தான் வாபஸா”…. முன்னாள் முதல்வர் கருத்து….!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது.

1 ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து இன்று காலை மக்களிடம் பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக மோடி எந்த முடிவையும் எடுக்காமல் தற்போது மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அங்குள்ள விவசாயிகளின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக திடீரென பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |