தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே திமுக எம்எல்ஏ அலுவலகத்தில் ஏழைகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். மேலும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக எம்எல்ஏ அலுவலகத்தில் தளபதி கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.