Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனவளர்ச்சி இல்லாத 3 1/2 வயது குழந்தை… வெறுத்துப்போன தாய் செய்த கொடூர செயல்…!!!

மனவளர்ச்சி குன்றிய மூன்றரை வயது குழந்தையை தலையில் அடித்து தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக்திவேல் என்பவர் சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை இளையா முதலி தெருவை சேர்ந்தவர். அவருக்கு 33 வயதுடைய நதியா என்னும் மனைவி இருக்கிறார். மூன்றரை வயது உடைய இஷாந்த் என்னும் மகனும் இவர்களுக்கு இருந்துள்ளான். இஷாந்த் பிறக்கும் போதே மன வளர்ச்சி குன்றி இருந்துள்ளார். சென்ற ஜனவரி மாதம் 22ஆம் தேதி கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி இஷாந்தை சென்னையில் உள்ள ஸ்டாலி அரசு மருத்துவமனையில் நதியா சேர்த்துள்ளார்.

அங்கு இஷாந்த் க்கு ஆறு நாட்கள் சிகிச்சை நடைபெற்று வந்தது. ஆனால் ஜனவரி 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதன்பின் கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டனர்.பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் குழந்தையின் உடலை பெற்றோர்களிடம் அளித்தனர். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தடைந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் தலையில் பலமாக அடித்ததால் மண்டை ஓடு உடைந்து குழந்தை இறந்திருப்பதாக அதில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து குழந்தையின் தலையில் அடித்துக் கொன்றதாக கூறி தாய் நதியாவை கைது பின்பு சிறையில் போட்டனர்.

போலீசார் தாய் மன வளர்ச்சி குறைந்த குழந்தை என்பதால் அடித்துக் கொன்றாரா? வேறு ஏதேனும் காரணத்தால் கொன்றாரா?வேறு யாராவது கொலை செய்து இருக்கக் கூடுமோ? என்று பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். குழந்தையை அடித்துக் கொன்ற தாய் பதினோரு மாதங்களுக்கு பிறகு கைதான சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |