அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட பணிகளை கலெக்டர் விசாகன் மற்றும் பல அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கும் பகுதியில் ரூபாய் 3.27 கோடி மதிப்புள்ள அரசு மருத்துவக் கல்லூரியை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கலெக்டர் விசாகன் புதியதாக கட்டப்படும் அரசு மருத்துவக் கல்லூரியை நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தங்கவேல், மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதனையடுத்து கலெக்டர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் என்னென்ன வசதிகளுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்று விசாரித்தார்.
அதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்குவதற்கு என தனித் தனி அறைகள் கட்டப்பட்டு வருவாதகாக அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர், மாணவிகளுக்கு என தனித்தனி அறைகளுடன் கூடிய விடுதிகளும், மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைக்கான பிரிவுகளுடன் கூடிய அறைகளும் கட்டப்பட்டு வருவாதகாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மேலும் கலெக்டர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை துரிதமாக செயல்பட்டு முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.