Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இருப்பில் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தற்போது இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், ” நாட்டில் சமூக பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார். எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார். ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

896 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6761 ஆக உயர்ந்துள்ளது. அதில் 6039 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 516 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 16,002 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

அதில், 0.2 விகிதத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், தொற்று விகிதம் அதிகமாக இல்லை என லாவ் அகர்வால் தெரிவித்தார். கொரோனா தாகத்திற்கு எதிரான போராட்டத்தில் சுகாதார ஊழியர்கள் தான் முன்னணியில் உள்ளனர். அவர்கள் மீது எந்த ஒரு தாக்குதலையும் நடத்த வேண்டாம் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |