தமிழக அரசு மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில 3 முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு ரூபாய் 500, ஆறாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
மேலும் உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், சென்னையில் கிறிஸ்தவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க பின்பற்றப்படும் நிபந்தனைகள் தளர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.