Categories
அரசியல் மாநில செய்திகள்

3.50பைசாவுக்கு கொடுக்குது…! அரசு 16ரூபாய்க்கு வாங்கி நஷ்டம்… 20லட்சம் லஞ்சம்… பகீர் கிளப்பும் பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் செய்திதொடர்பாளரும், நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி, மத்திய அரசின் புதிய மின்திருத்தச் சட்டம் வந்தால், எப்படி 100 யூனிட் மின்சாரம் பறிபோகும் ? இங்கே ஒரு பிரச்சனை என்னவென்றால்,  இலவச மின்சாரம் கொடுப்பது அரசாங்கம் தான். நாம் சொல்லுவது என்னவென்றால், அரசாங்கம் நீங்க கொடுங்கள். ஆனால் டாங்கெட்கோ  நீங்கள் கொடுக்காததினால் நஷ்டத்தில் போகிறது.

அதனால் என்ன ஆகிறது ? அதுதான் பிரச்சினை டாங்கெட்கோ என்ன செய்கிறது ?  1000 ரூபாய்க்கும் வாங்கி 100, 500 ரூபாய்க்கு விக்கிறார்கள். அப்போது 500 ரூபாய் நஷ்டம். நாம் என்ன சொல்கிறோம். அரசு 500 ரூபாய் கொடுங்கள்,  டாங்கெட்கோவுக்கு. மத்திய அரசாங்கம் சொல்வது இவ்வளவுதான், வேறு எதையும் சொல்லவில்லை. அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்க கூடாது, இதை வேண்டுமென்றே ஏன் நஷ்டத்தில் இயங்க விடுகிறார்கள் என்று கேட்டால், நான் ஏற்கனவே சொன்னேன் தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனங்களே 3.50 பைசாவிற்கு மின்சாரத்தை கொடுக்கிறோம் என்று சொன்னால்…  16 ரூபாய்க்கு ஏன் ஒப்பந்தம் போடுகிறீர்கள் ? இல்லை என்று சொல்ல சொல்லுங்கள், 20 லட்சம் லஞ்சம் வாங்கவில்லை என்று சொல்ல சொல்லுங்க. சூரிய மின்வழி திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள்.. ஒரு ஒரு மெகாவாட்டிற்கு, எல்லாருக்கும் தெரிந்தது என அரசின் மீது பகீர் குற்றசசட்டை கிளப்பினார்.

Categories

Tech |