ஆடு மேய்ப்பதற்காக 40,000 ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட 10 வயது சிறுவனை வருவாய் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கம் வெள்ளி நகைகளை அடகு வைப்பது போன்று, 10 வயது சிறுவனை40,000 ரூபாய்க்காக ஆடு மேய்க்க அடமானம் வைத்தது கும்பகோணம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி குழந்தை ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, முருகானந்தன் என்பவரின் 40,000 பெற்றுக்கொண்டு தனது மகனை அடமானம் வைத்துள்ளார். அடமானம் பெற்ற முருகானந்தம் சிறுவனை ஆடு மேய்க்க பயன்படுத்திருக்கிறார். இதனை அறிந்த அதிகாரிகள் பாபநாசம் அருகே ராஜகிரியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை மீட்டுள்ளனர். 10 வயது சிறுவனை ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமையாக பயன்படுத்திய முருகானந்ததின் மீது கொத்தடிமைகள் மீட்பு சட்டத்தின் கீழ் வருவாய் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 40,000 ரூபாய்க்காக சிறுவன் அடமானம் வைக்கப்பட்டது கும்பகோணம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.