விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை கைது செய்த போலீசார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள நெடுங்குளத்தில் அசோக்குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் எஸ்.என்.புரம் சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த வேல்சாமி(34), செல்வம்(26), முத்துவேல்(19) ஆகிய 3 பேர் அசோக்குமாரை வழிமறித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அசோக்கிடம் இருந்த 1,500 ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அசோக்குமார் உடனடியாக திருத்தங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக அந்த 3 பேரையும் கைது செய்து அவர்கள் கைப்பற்றிய பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.