சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த மூன்று அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொண்டனந்தல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்பனை செய்வதற்காக வைத்திருக்கின்றனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சரவணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் வீட்டில் வைத்து மது பாட்டில் விற்பனை செய்த ரீட்டா மேரி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்த மணி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 9 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.