Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு பத்திரம் அடமானம்… போலி ஆவணம் தயாரித்த குடும்பத்தினர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை.‌.!!

அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தனது போலி ஆவணம் தயாரித்து மனைவியின் பெயருக்கு மாற்றிய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா தேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அப்போது பிளான் ஏரியில் அமைந்திருக்கும் தனது வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனையடுத்து கடந்த 2012-ஆம் வருடம் தந்தை வாங்கிய 90,000 ரூபாய் கடனுக்காக ரமேஷ் தனது பெரியப்பா மகன் வரதராஜ் என்பவரிடம் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார்.

பின்னர் அந்தப் பாத்திரம் மூலமாக வரதராஜனின் அண்ணன் பாபு என்பவர் அவரது மனைவி வனரோஜா பெயரில் சொத்தை மாற்றியதாக தெரியவந்துள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாபு மற்றும் அவரது மனைவி வனரோஜா மகன் அபின் ஆகியோர் சேர்ந்து ரமேஷ் அவருடைய மனைவி சத்யா தேவி ஆகியோரை வீட்டிலிருந்து வெளியே விரட்டி அவர்களை தாக்கியதாக தெரியவந்துள்ளது. இது பற்றி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால் இம்மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் சென்னையில் அமைந்திருக்கும் டி.ஜி.பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

அதில் தன்னுடைய வீட்டை போலி ஆவணம் மூலமாக கிரையம் செய்திருப்பதாகவும், இது பற்றி கேட்டதற்கு வீட்டின் பூட்டை உடைத்து அத்து மீறி நுழைந்து எங்களைத் தாக்கி விட்டு வீட்டுக்கு பூட்டு போட்டு சென்ற பாபு, வரதராஜ், வனரோஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது வீட்டை மீட்டு தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்து இருந்திருக்கிறார். இதனை தொடர்ந்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திலிருந்து உத்தரவின் படி வரதராஜ், வனரோஜா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |