மர்மமான முறையில் ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மெயின் சாலையில் டிரைவர்கள் அவர்களது ஆட்டோக்களை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் மறுநாள் காலையில் அங்கு நிறுத்தியிருந்த 3 ஆட்டோக்களும் மர்ம முறையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் எரிந்து கொண்டிருந்த ஆட்டோக்களில் தண்ணீரை ஊற்றி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இதில் ஆட்டோக்களின் டயர் மற்றும் மேற்பகுதி ஆகியவை எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஐஸ்-அவுஸ் காவல்துறையினர் மர்மமான முறையில் ஆட்டோ எரிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.