தென்கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வரும் காரணத்தினால் அதை சரிசெய்யும் முயற்சியில் விசித்திரமான திட்டத்தை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது.
தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.73,33,025) வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் புதிதாக திருமணம் செய்யும் தம்பதிக்கு 92 ஆயிரம் அமெரிக்க டாலர் கடனாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு கடன் பெறும் தம்பதியினர் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும். அதன் பிறகு இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது கடன் தொகையில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இறுதியாக மூன்றாவது குழந்தை பெற்றால் முழு தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. தென்கொரியாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.