அமெரிக்காவிற்கு, கனடா நாட்டிலிருந்து Calvin Bautista என்ற வகை பாம்புகளை எடுத்து வந்த நபர் கைதான நிலையில், அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய Calvin Bautista என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி அன்று கனடாவிலிருந்து Burmese என்ற மூன்று பாம்புகளை பேன்ட்டிற்குள் மறைத்து கடத்தி வந்த வழக்கில் கைதானார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு, விசாரணை நடத்தி அவரை நிபந்தனையின் கீழ் விடுவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவிருக்கிறது. அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 20 வருடங்கள் சிறை தண்டனையும், $2,50,000 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எடுத்து வந்த பாம்பு உலகிலேயே மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த வகை பாம்புகள் அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் புகுந்து விலங்குகளை அச்சுறுத்துவதாக தெரியவந்திருக்கிறது.