3 கார் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் நியூ பிருன்ஸ்விக் நகரில் சாலையில் பயணித்து கொண்டிருந்த மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 31 வயதுள்ள இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இரண்டாவது காரில் பயணித்த 34 வயதுள்ள பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மூன்றாவது காரில் பயணித்த சிறுவன் மற்றும் பெண் சிறிய காயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.