மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை நகராட்சி ஆணையர் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஏற்கனவே ஒரு நபருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சுமார் 13 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டனர்.
அதிலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருமங்கலம் நகராட்சி ஆணையர் அதை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தார்.
மேலும் காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்டவை குடியிருப்பு வளாகங்களுக்கு நடமாடும் கடைகளாக வரும். அங்கே பொதுமக்கள் வாங்கிக் கொள்ளுமாறும் கடைக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து வெளியூர் ஆட்கள் யாரும் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக ஊரின் எல்லைப் பகுதிகள் அனைத்திலும் தகரம் மற்றும் கம்புகளை கொண்டு தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.