Categories
உலக செய்திகள்

3 நாடுகளை வாட்டி வதைக்கும் ‘அனா’ புயல்…. வீடுகளை இழந்த ஒரு லட்சம் மக்கள்…!!!

மடகாஸ்கர் நாட்டில் புயலால் சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் மலாவி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வெப்பமண்டல புயல், அனா உருவாகி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலுக்கு பின்பு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் 3 நாடுகளில் நிலச்சரிவு, வெள்ளம் உருவானது. இதனால் அங்கு ஏராளமான நகரங்கள் மொத்தமாக பாதிக்கப்பட்டது.

இதில் மடகாஸ்கர் நகரில் 48 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலாவி நாட்டில், மழை, வெள்ளம் மற்றும் புயல் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நாட்டின் பல நகர்கள் பேரழிவு நகர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புயல் காரணமாக நாடு முழுக்க மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. மொசாம்பிக் நாட்டிலும் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |