சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று 6 இடங்களில் கரைத்துக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேற்று சென்னை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் விநாயகர் சிலைகளுக்கான வழிபாடுகள் முடிந்த பிறகு வருகின்ற 5_ஆம் தேதி , 7_ஆம் தேதி , 8_ஆம் தேதி என 3 தினங்களில் விநாயகர் சிலைகளின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும்.விநாயகர் சிலைகளை திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், பல்கலைக்கழக நகர் கடற்கரை,
காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகிய 6 இடங்களில் கரைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.விநாயகர் சிலைகளை கரைக்கும் கடற்கரை பகுதியில் சென்னை போலீசார் சார்பில் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள், மருத்துவ குழுக்கள் உள்ளிட்ட மென்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதைகளிலும், சிலையை கரைக்கும் கடற்கரை இடங்களிலும் விரிவான போலீஸ் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிக்கை மூலமாக சொல்லப்பட்டுள்ளது.