தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படுவதாக வெளியான தகவல் குடிமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் விடுமுறைகள், உள்ளூர் விடுமுறை தினத்தில் மதுபான கடைகள் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஜனவரி மாதம் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 26ஆம் தேதி குடியரசு தினமும், 28ஆம் தேதி தைப்பூச தினமும் நடைபெறும். இந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 15, 26. 28 தேதிகளில் மதுபான கடை மூடப்படும் என தமிழக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.