Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் பதற்றம்…. தொடர்ந்து கரை ஒதுங்கிய 3 சடலங்கள்…!!!

இலங்கையின் காலி முகத்திடல் கடற்கரையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களின் உடல்கள்  கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் குடில்கள் நீக்கப்பட்டது.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியாளர்கள் கைதானார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று அந்த பகுதியில் 35 வயதுடைய ஒரு இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியிருக்கிறது. அவர் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்று மற்றொரு இளைஞனின் உடலும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வேறொரு இளைஞரின் சடலமும் கரை  ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |