Categories
உலக செய்திகள்

இன்று 3 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்…. ஜப்பான் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

ஜப்பான் அரசு கடந்த 2019ஆம் வருடத்திற்கு பின் இன்று மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது.

ஜப்பான் நாட்டில் கடந்த 2019 வருடத்திற்கு பின் இன்று குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டின் பிரதமரான கிஷிடா-கியோடா ஆட்சியில் தற்போது தான் முதல்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

அதாவது கடந்த 2019 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 26ஆம் தேதியன்று ஒரே குடும்பத்தில் உள்ள நான்கு நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டில், மனித உரிமை குழுக்களும், சர்வதேச அளவிலான விமர்சனங்கள் எழுந்த போதும், மரண தண்டனைக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |