கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று ஒரே நாளில் 3 உயிரிழந்துள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய் பாதிப்பு என்பது தமிழகம் முழுவதும் அதிக அளவில் ஏற்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கும் அளவுக்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஊரடங்கு தளர்த்தப் பட்ட சூழ்நிலையில், பல்வேறு நபர்களும் அதிக அளவில் வெளியே வந்ததன் காரணமாகவும் , கோயம்பேடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடியதன் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இறப்பு வீதம் குறைவாக இருக்கின்றது. பாதிப்புகள் அதிகம் இருந்தாலும், இறப்பு வீதம் குறைவாக உள்ளதால் யாரும் பயப்படவேண்டாம். இதை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று காலை காலை நிலவரப்படி சென்னையில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து வந்த சென்னை சூளைமேடு சேர்ந்தவர் 56 வயதானவர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஆறாம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டே நாட்களில் இன்று காலை மரணமடைந்துள்ளார்.
இதேபோல மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் கடந்த 30ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கின்றார். அதேபோல கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை மட்டும் மூன்று உயிரிழப்புகள் நிகழந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 40ஆக அதிகரித்துள்ளது.