ஜெருசலேமில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் மூன்று நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடக்கும் மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார்.
இதில் மூவர் உயிரிழந்ததோடு, ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பின் நடந்தே தப்பி சென்றதாக சிலர் கூறியிருக்கிறார்கள். தற்போது, காவல்துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.