தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் முதலமைச்சர் பழனிச்சாமி நீட்டித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து,
தமிழகத்தின் சில பகுதிகளில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், பல பகுதிகளில் பாதிப்பு ஓரளவிற்கு நன்றாக கடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தருமபுரி, கரூர், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தென்காசி, அரியலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கோவை, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளில், வழக்கம்போல் சீரான அளவில் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் 13 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.