சுவிட்சர்லாந்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.
சுவிட்சர்லாந்து பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் நேற்று இரவு 11.35 மணிக்கு 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் உணர்ந்துள்ளனர். இதனை நில அதிர்வு சேவை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அதில், பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக இருந்தது. இதுமட்டுமின்றி இரவு 10.37 மற்றும் 10.39 மணிக்கும் சிறிய இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தினால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று உறுதி அளித்துள்ளது.