கிருஷ்ணகிரி அருகே 3 விவசாயிகளை கொன்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து பத்திரமாக காட்டிற்குள் விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இந்த வனப் பகுதிகளை சுற்றிலும் சிறு குறு கிராமங்கள் ஏராளம் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட யானைகளில் ஒரு யானை மட்டும் மிகுந்த ஆத்திரத்துடன், கிராமப் பகுதிகளைச் சுற்றி வந்துள்ளது. அதிகம் கோபம் கொள்ளும் அந்த யானை குடியிருப்புக்குள் புகுந்து இதுவரை தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள மூன்று விவசாயிகளை தாக்கியதில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மூன்று விவசாயிகளை கொன்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து வனத்துறையினர் காட்டுக்குள் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததன் பெயரில், ட்ரோன் கேமரா மூலம் காட்டுக்குள் யானை இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. இதனையடுத்து திம்மம்சத்திரம் பகுதியில் யானையைக் கண்டு பிடித்த அதிகாரிகள், இரண்டு மயக்க ஊசியை கொண்டு யானையை மயக்கமடைய வைத்து பின் கிரேன் மூலம் தூக்கி லாரியில் போட்டு வனத்துறைக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் யானை விடப்பட்டது. பின் அத னுடைய கழுத்தில் ஜிபிஎஸ் காலர் பொருத்தப்பட்டு யானை ஊருக்குள் வலம் வருகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது.