Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க… அமைக்கப்பட்ட 3 குழு…. தீவிரமாக நடைபெறும் கண்காணிப்பு பணி…!!

விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்க மலர்கொடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவை அனைத்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த விதிமுறைகளை நிறுவனங்கள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும், அதனை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வர். மேலும் இது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மலர்கொடி 9789723235, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் 9944258037 போன்றோரின் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Categories

Tech |