இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர் ஆவார். இவர் பாலிவுட்டின் மிஸ்டர் பெர்பெக்ஷனிஸ்ட் என அழைக்கப்படும் அமீர்கானுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முதல் முதலில் ஆடிஷன் போனார்.
எனினும் அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதாவது அவர் த்ரீ இடியட்ஸ் படத்துக்காக ஆடிஷன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 5 வருடங்களுக்கு பின் அனுஷ்கா, அமீர்கானுக்கு ஜோடியாக பிகே படத்தில் நடித்தார். த்ரீ இடியட்ஸ் 2009 ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தில் அமீர்கானின் நாயகியாக கரீனா கபூர்கான் நடித்திருந்தார்.